‘டெட்பூல் & வோல்வரின்’ படத்தின் பைனல் டிரெய்லர் வெளியீடு

மார்வெல் ஸ்டுடியோஸ் 'டெட்பூல் & வோல்வரின்' படத்தின் பைனல் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

வாஷிங்டன்,

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இணையாக வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை பிரபல இயக்குனர் ஷான் லெவி இயக்கியுள்ளார். இதில், ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும், ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர்.

Are you ready?In ONE WEEK, experience #DeadpoolAndWolverine in theaters everywhere. Get tickets: https://t.co/Gsnkj243mSpic.twitter.com/qLyomlTGLt

— Marvel Studios (@MarvelStudios) July 19, 2024

இந்நிலையில், நேற்று பைனல் டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் 'டெட்பூல் & வோல்வரின்' திரையரங்குகளில் வரும் 26-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!