டென்னிஸ் சங்க தலைவர், துணை தலைவராக விஜய் அமிர்தராஜ், கார்த்தி ப.சிதம்பரம் தேர்வு

டென்னிஸ் சங்க தலைவர், துணை தலைவராக விஜய் அமிர்தராஜ், கார்த்தி ப.சிதம்பரம் தேர்வு

சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக விஜய் அமிர்தராஜ் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைதலைவராக கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள டென்னிஸ் மைதானஅரங்கில் கடந்த 16-ம் தேதிநடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின்தலைவராக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்திப.சிதம்பரம் எம்.பி., ஹரேஷ் ராமசந்திரன், விஜய் சங்கர் ஆகியோரும், செயலாளராக பி.வெங்கடசுப்ரமணியம், பொருளாளராக டோட்லா விவேக்குமார் ரெட்டியும் தேர்வாகி உள்ளனர்.

மேலும் உறுப்பினர்களாக, பிரேம் குமார் கர்ரா (இணை செயலாளர்), ஜாஸ்பர் கார்னேலியஸ், முரளி பத்மநாபன், கே.சுரேஷ், அனுராதா ரவிசங்கர், மனோஜ் சாந்தனி, கே.சிவராம் செல்வகுமார், ஜி.வைரவன், கே.மதுபாலன், கே.சுரேஷ்,ராம் சுகுமார், கார்த்திக் ராஜசேகர், எஸ்.சுவாமிநாதன், லதாராஜகோபால் குமார் உள்ளிட்ட 14 பேர் தேர்வாகி உள்ளனர். தலைவர் உட்பட அனைவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

அந்தவகையில், தமிழ்நாடுடென்னிஸ் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக விஜய்அமிர்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2027-ம் ஆண்டு வரை பொறுப்பு வகிப்பர்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி