டெல்லியில் கனமழை: கட்டிடம் இடிந்து விபத்து – ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்

புதுடெல்லி,

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று இரவு டெல்லியின் சப்ஜி மண்டி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இரவு 8.57 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 5 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல தாமதமானது. ஏராளமானோர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

#BREAKING || கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தது
டெல்லி வடக்கு மாவட்டத்தின் சப்ஜி மண்டி பகுதியில், கனமழை காரணமாக, கட்டிடம் இடிந்து விழுந்தது
ஏராளமானோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளதாக தகவல்#HeavyRain#delhi#ThanthiTVpic.twitter.com/AWIwJtG7pp

— Thanthi TV (@ThanthiTV) July 31, 2024

ஒருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

#WATCH | A house collapsed in the Sabzi Mandi area of north Delhi following heavy rain.
One person has been removed from the debris and admitted to Hindu Rao hospital-DFS: Delhi Fire Services pic.twitter.com/p7cIEOaWQp

— ANI (@ANI) July 31, 2024

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்