டெல்லியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி,

பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டெல்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தநிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகருக்கு திருப்பி விடப்பட்டது.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்