டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – ஆம் ஆத்மி முடிவால் அதிர்ச்சி!
ஆம் ஆத்மி
டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியின்றி தனியாகவே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றியது
ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் சேரும்போதே சட்டசபைத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தியதாகவும் கூறிய கோபால் ராய்,
சட்டசபை தேர்தல் என்று வரும்போது, யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாகவே போட்டியிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.
விளம்பரம்
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது – நரேந்திர மோடி!
டெல்லியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் கடந்த முறை 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
delhi