டெல்லியில் கூடும் NDA தலைவர்கள்.. குடியரசு தலைவரை சந்திக்கும் மோடி..

டெல்லியில் கூடும் NDA தலைவர்கள்.. குடியரசு தலைவரை சந்திக்கும் மோடி.. அடுத்தடுத்த பரபரப்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி

பிரதமர் மோடி குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரவிருக்கிறார்.

மக்களவைத் தோ்தலில் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 272 இடங்களில் பாஜக வெற்றி பெறவில்லை. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் புதிய மக்களவை உறுப்பினா்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மற்றும் பாஜக மாநில முதலமைச்சர்கள் டெல்லிவந்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாஜக அமைச்சரவையில் 6 கட்சிகளுக்கு வாய்ப்பு?

இன்று நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில், மக்களவை பாஜக குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்திக்கும் மோடி, ஆட்சியமைக்க உரிமை கோருவாா் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 9-ஆம் தேதி மாலையில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடியும், அவரது அமைச்சரவையும் பதவியேற்பாா்கள் என கூறப்படுகிறது. முன்னதாக, இந்தப் பதவியேற்பு விழா ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.

விளம்பரம்

ஆனால், அமைச்சா்கள் பட்டியல், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தை உள்ளிட்ட காரணங்களால் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
India Alliance
,
NDA Alliance
,
PM Narendra Modi
,
President Droupadi Murmu

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்