டெல்லியில் ஜன.1 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை

சென்னை,

குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகரில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு மீதான தடை ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் தயாரிக்கப்படும். இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசின் குளிர்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். என்றார்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!