டெல்லி எய்ம்ஸில் சீதாராம் யெச்சூரி – உடல்நலம் எப்படி இருக்கிறது?

சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடம்: சிபிஎம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகப் பதவியில் உள்ளார்.

விளம்பரம்

அண்மையில் அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீதாராம் யெச்சூரி, கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைய அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Also Read |
யுபிஐ பயனாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “யெச்சூரி சுவாசக் குழாய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார். பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
AIIMS Hospital
,
CPM
,
Health
,
Marxist Communist Party
,
Sitaram Yechury

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்