டெஸ்ட்டில் ஆஸி.க்கு தொடக்க ஆட்டக்காரர் யார்? பயிற்சியாளர் பதில்!

ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஸ்டீவ் ஸ்மித் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவது குறித்து அனைவரும் பேசுகின்றனர். ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவது தொடர்பான விஷயத்தில் நாங்களும் கவனம் செலுத்தி வருகிறோம். தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கான ஆலோசனை நடைபெறவே இல்லை எனக் கூறினால், நான் பொய் கூறுகிறேன் என்றே அர்த்தம். நாங்கள் தொடக்க வீரர் இடத்துக்கு ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆனால், இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!