டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெற விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புதாக சூர்யகுமார் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்த சில மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சூர்யகுமார் யாதவ் மட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான், கே.எல்.ராகுல் மற்றும் ரஜத் படிதார் போன்ற வீரர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிவை சந்தித்த பாகிஸ்தான்!

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: டெஸ்ட் போட்டியில் தங்களுக்கான இடத்தைப் பிடிக்க நிறைய வீரர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்திய டெஸ்ட் அணியில் எனக்கான இடத்தை மீண்டும் பிடிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானேன். அதன்பின், காயம் காரணமாக என்னால் அணியில் இடம்பெற முடியவில்லை. வீரர்கள் பலரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் நான் மீண்டும் விளையாட வேண்டும் என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை. புஜ்ஜி பாபு தொடர் மற்றும் துலிப் கோப்பை இரண்டுமே எனது கட்டுப்பாட்டில் உள்ளவை. அதன்பின், என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். 10 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சிவப்பு பந்து போட்டிகளுக்கு எப்போதும் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஆரம்ப காலங்களில் மும்பையில் அதிக அளவில் சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடியுள்ளேன். அப்போதிலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவிலான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விரும்புகிறேன் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி ஜோ ரூட்!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ள சூர்யகுமார் யாதவ், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

82 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 5,628 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!