டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை தேர்வு செய்த பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி இந்திய டெஸ்ட் அணியின் ஆல் டைம் ஆடும் லெவனை வெளியிட்டுள்ளார்.

கராச்சி,

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட கனவு அணியை அவ்வப்போது பலரும் வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தன்னுடைய தரமான 11 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியின் ஆல் டைம் ஆடும் லெவனை வெளியிட்டுள்ளார்.

இது பற்றி சமீபத்தில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது, இந்தியாவிலிருந்து தொடங்குகிறேன். அதில் மகத்தான வீரரான சுனில் கவாஸ்கரை விட சிறந்த ஓப்பனர் இருக்க முடியாது. 2வது இடத்தில் விரேந்திர சேவாக் மற்றும் ரோகித் சர்மாவை நான் தேர்ந்தெடுப்பேன். அதில் உங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

3வது இடத்தில் கண்டிப்பாக விராட் கோலி சரியானவர். 4வது இடத்தில் சச்சினை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. 5வது இடத்தில் முகமது அசாருதீன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம். அசாருதீன் நிறைய சிறந்த வீரர்களை தனது அணியில் உருவாக்கி உள்ளார்.

இதையடுத்து 6வது வீரராக விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டனாக தோனியையும், 7வது இடத்தில் கேப்டனாக கபில் தேவையும் தேர்வு செய்கிறேன். 8வது அனில் கும்ப்ளேவையும், 9வது இடத்தில் அஸ்வின் இருந்தாலும் நான் ஹர்பஜன் சிங்கையே தேர்வு செய்கிறேன். 10வது இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவும், 11வது இடத்தில் ஜவஹல் ஸ்ரீநாத் மற்றும் ஜாஹீர் கானும் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பாசித் அலி தேர்வு செய்த இந்திய அணி விவரம்;

1. சுனில் கவாஸ்கர்

2. விரேந்திர சேவாக் அல்லது ரோகித் சர்மா

3. விராட் கோலி

4. சச்சின் டெண்டுல்கர்

5. முகமது அசாருதின் அல்லது ராகுல் டிராவிட்

6. எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்)

7. கபில் தேவ் (கேப்டன்)

8. அனில் கும்ப்ளே

9. ஹர்பஜன் சிங்

10. ஜஸ்ப்ரீத் பும்ரா

11. ஜவஹல் ஸ்ரீ நாத் அல்லது ஜாஹீர் கான்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா