டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புதிய சாதனைகள்!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனைகள் படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

19 சிக்ஸர்கள்… டி20 போட்டிகளில் ஆயுஷ் பதோனி புதிய சாதனை!

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசி அசத்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் எடுத்த ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

HISTORY IS MADE AT LORD'S! pic.twitter.com/f286avFRRu

— England Cricket (@englandcricket) August 31, 2024

அலெஸ்டர் குக் சாதனை முறியடிப்பு

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் விளாசிய வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார். இதற்கு முன்னதாக, அலெஸ்டர் குக் 33 சதங்களுடன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவராக வலம் வந்த நிலையில், இன்று ஜோ ரூட் 34-வது சதம் விளாசி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

200 கேட்ச்கள்

200 CATCHES IN TEST CRICKET!
The records just keep on coming for Joe Root… pic.twitter.com/voS6MpnK8b

— England Cricket (@englandcricket) August 31, 2024

இந்த சாதனையை தவிர்த்து, டெஸ்ட் போட்டிகளில் மற்றுமொரு சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் 200 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

இங்கிலாந்து அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 12,377 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 இரட்டை சதங்கள், 34 சதங்கள் மற்றும் 64 அரைசதங்கள் அடங்கும்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!