டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி ஜோ ரூட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முன்னேறி வருகிறார்.

இங்கிலாந்து அணி தற்போது இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் மான்செஸ்டரில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுட்டான விரக்தியில் ஹெல்மெட்டை அடித்து பறக்கவிட்ட பிராத்வெய்ட்!

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 62* ரன்களும் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நோக்கி முன்னேறி வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் எடுத்த வீரராக மாறுவதற்கு ஜோ ரூட்டுக்கு இன்னும் 5 அரைசதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களுடன் அதிக அரைசதங்கள் எடுத்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பேசியதென்ன?

டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்துள்ள வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் – 68 அரைசதங்கள்

சந்தர்பால் – 66 அரைசதங்கள்

ஜோ ரூட் – 64* அரைசதங்கள்

ஆலன் பார்டர் – 63 அரைசதங்கள்

ராகுல் டிராவிட் – 63 அரைசதங்கள்

ரிக்கி பாண்டிங் – 62 அரைசதங்கள்

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!