டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விராட் கோலி: ரிக்கி பாண்டிங்

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் விராட் கோலி என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகப் பெரிய போட்டிகள் நினைத்து அச்சம் கொள்ளமாட்டார்கள் எனவும், வெளிநாடுகளில் இந்திய அணி பெற்றுள்ள வெற்றிகளே அதற்கான சான்று எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

ஃபிரேசர் மெக்கர்க் அதீத திறமைசாலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின், கடந்த 4 ஆண்டுகளாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அணியை டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தினார்.

ரிக்கி பாண்டிங்

காபாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்றது. முன்னதாக, காபாவில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அவர்களை நன்றாக மாற்றிக் கொண்டுவிட்டதாக நினைக்கிறேன். அவர்கள் இனி மிகப் பெரிய போட்டிகள் குறித்து அச்சம் கொள்ளமாட்டார்கள்.

ஐபிஎல் தொடருக்கு பாராட்டு

ஐபிஎல் தொடர் நிறைய வீரர்களை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் தொடரிலிருந்து அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் அச்சமின்றி விளையாடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை கவனித்ததில், ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் மிகுந்த அழுத்தமான சூழல்களில் விளையாடுவதால், அவர்கள் மற்ற போட்டிகளில் அச்சமின்றி விளையாடுகிறார்கள். அவர்கள் தோல்வியை நினைத்து பயப்படுவதில்லை.

அதிரடி பேட்டிங்கின் ரகசியம் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

பார்டர் கவாஸ்கர் தொடர்

கடந்த 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இன்னும் வெற்றி பெறவில்லை. தொடர்ச்சியாக நான்கு முறையாக இந்திய அணியே பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை இந்திய மண்ணிலும், இரண்டு முறை வெளிநாட்டிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையில்

68 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதில் 40 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டிகள் தோல்வியிலும், 11 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளன.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமை இந்திய அணியையே சேரும். இந்த பெருமை விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்

‘பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்’ – நிர்மலா சீதாராமன்