டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் அடித்துள்ளார்.

சென்னை,

இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 339 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அஸ்வின் சதமடித்து (102 ரன்கள்) அசத்தினார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதிலும் குறிப்பாக சென்னை மண்ணின் மைந்தன் அஸ்வின் சதம் அடித்து அணியை தலை நிமிர வைத்தார். சென்னை மைதானத்தில் அஸ்வின் அடித்த 2-வது சதமாக இது பதிவானது.

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் குறிப்பிட ஒரு மைதானத்தில் 2 சதம் மற்றும் குறைந்தபட்சம் இருமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக அஸ்வின் இணைந்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சோபர்ஸ் – ஹெடிங்லி மைதானம்

2.கபில் தேவ் – சென்னை மைதானம்

3.கிறிஸ் கெய்ர்ன்ஸ் – ஆக்லாந்து மைதானம்

4. இயன் போத்தம் – ஹெடிங்லி மைதானம்

5. அஸ்வின் – சென்னை மைதானம்.

Related posts

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா

முதலாவது டெஸ்ட்: அஸ்வின் – ஜடேஜா சிறப்பான பார்ட்னர்ஷிப்… சரிவிலிருந்து மீண்ட இந்தியா