டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களை கடந்த முதல் வீரர்!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகர் ரஹிம் படைத்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

6000 ரன்கள் குவித்த முதல் வீரர்

வங்கதேச அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. வங்கதேசம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்மதுல் ஹாசன் ஜாய் 38 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முஷ்ஃபிகர் ரஹிம் (கோப்புப் படம்)

Standard setter
Congratulations to Mushfiqur Rahim on this monumental achievement, becoming the first Bangladeshi cricketer to reach 6,000 runs in Test cricket. #BCB#Cricket#BANvSA#WTC25#TestCricket#CricketLegendpic.twitter.com/ocDm7m8aCG

— Bangladesh Cricket (@BCBtigers) October 22, 2024

இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்கள் எடுத்துள்ளதன் மூலம், வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிகர் ரஹிம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக 6000 ரன்களைக் கடந்த வீரர் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிக்க: இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

வங்கதேச அணிக்காக இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முஷ்ஃபிகர் ரஹிம் 6,003 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடங்கும்.

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam