டெஸ்லா காரில் குறை; சிறுமிக்கு எலான் பதில்!

டெஸ்லா காரில் குறை; சிறுமிக்கு எலான் பதில்!டெஸ்லா காரில் பிரச்னை இருப்பதாக சிறுமி புகார்கோப்புப் படம்

சீன சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் பிரச்னை இருப்பதாக எலான் மஸ்க்கிடம் புகார் தெரிவித்துள்ளார்.

7 வயதான சீன சிறுமி மோலி என்பவர் பயன்படுத்தி வரும் டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் சிறு பிரச்னை இருப்பதாகக் கூறி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் பயனர் ஐடியை மேற்கோள் காட்டி, விடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் சிறுமி தெரிவித்திருப்பதாவது, “நான் சீனாவைச் சேர்ந்த மோலி. உங்கள் டெஸ்லா காரில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நான் ஒரு படத்தை வரையும்போது, முன்னர் வரைந்த படம் அழிந்து விடுகிறது. இதனை சரிசெய்ய முடியுமா? நன்றி” என்று கூறியுள்ளார்.

சிறுமிக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க், “நிச்சயமாக” என்று சிறுமியின் விடியோவில் மறுபதிவிட்டுள்ளார். சிறுமியின் இந்த விடியோவானது, மில்லியன் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கடந்துள்ளது. மேலும், நெட்டிசன்கள் பலரும் சிறுமியின் விடியோவிற்கு பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சிறுமியைத் தொடர்ந்து டெஸ்லா கார் பயனாளர்கள் பலரும், காரில் உள்ள தொடுதிரையில் ஒரு படம் வரையும்போது, நாம் முன்னர் வரைந்திருந்த படம் மறைந்து விடுகிறது; இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்