டேவிஸ் கோப்பை டென்னிஸ்: குரூப் 1 சுற்றில் இந்தியா தோல்வி

இந்திய அணி அடுத்ததாக குரூப்1 ‘பிளே-ஆப்’ சுற்றில் விளையாட உள்ளது.

ஸ்டாக்ஹோம்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 சுற்றில் இந்திய அணி சுவீடனை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவியது. ஸ்டாக்ஹோமில் நடந்த இப்போட்டியின் ஒற்றையர் ஆட்டங்களில் ஸ்ரீராம் பாலாஜி 4-6, 2-6 என நேர் செட்டில் ஸ்வீடனின் ஒய்மர் இலியாஸிடமும், ராம்குமார் ராமநாதன் 3-6, 4-6 என்ற நேர் செட்டில் போர்க் லியோவிடமும் தோற்றதை அடுத்து இந்தியா 0-2 என பின்தங்கியது.

இதனால் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் ஸ்ரீராம் பாலாஜி – ராம்குமார் ராமநாதன் ஜோடி களமிறங்கியது. பெர்கெவி பிலிப் – ஆந்த்ரே கோரன்சன் ஜோடியுடன் மோதிய இந்திய இணை 3-6, 4-6 என மீண்டும் தோல்வியை தழுவியதால் சுவீடன் அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. முடிவில் சுவீடன் 4-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்திய அணி அடுத்ததாக குரூப்1 'பிளே-ஆப்' சுற்றில் விளையாட உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா