டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவுடன் மோதும் இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவுடன் மோதுகிறது.

சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் திங்கள்கிழமை வெளியிட்ட டிராவின் படி, அந்த பிளே-ஆஃப் சுற்று அடுத்த ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், உலக குரூப் 1 மற்றும் 2 ஆகியவற்றுக்கான பிளே-ஆஃப் ஆட்டங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன.

இதில் 52 நாடுகள் தங்கள் சொந்த மண்ணிலோ, அல்லது எதிரணியின் மண்ணிலோ விளையாடவுள்ளன. இதில் குரூப் 1 மற்றும் 2-இல் தலா 26 நாடுகளின் அணிகள் உள்ளன.

இதில் இந்தியாவுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் நிலையில், இந்தியா தனது மண்ணிலேயே விளையாடும் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடப்பாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பிளே-ஆஃபில் இந்தியா 4-0 என பாகிஸ்தானை அதன் மண்ணிலேயே வென்று, உலக குரூப் 1-க்கு தகுதிபெற்றது. எனினும், கடந்த செப்டம்பரில் ஸ்வீடனிடம் தோற்றதை அடுத்து, மீண்டும் 2025 உலக குரூப் 1 பிளே-ஆஃப் கட்டத்துக்கு இறங்கியது.

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 3 முறை (1966, 1974, 1987) ரன்னா் அப் இடத்தைப் பிடித்துள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்