தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? – ப.சிதம்பரம்

தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில், தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.

தற்போது, ​​ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். 8 தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏன்?

இதையும் படிக்க | சென்னை, 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அரசு விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும்பொருட்டு மத்திய அரசு, இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து தகவல் ஆணையர்களின் பணி நிலைமை குறித்த விதிகளை மாற்றியுள்ளது.

தகவல் ஆணையர்களை நியமிக்காததுதான் இந்த சட்டத்திற்கு மரண அடியை ஏற்படுத்துவதற்கான வழி" என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது