தகுந்த காரணமின்றி ரயில் அபாய சங்கிலியை இழுத்தால் என்ன தண்டனை?

தகுந்த காரணமின்றி ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால் என்ன தண்டனை தெரியுமா? ரயில்வே விடுக்கும் எச்சரிக்கை!

வெளியூர் பயணங்களுக்கு கார் முதல் விமானம் வரை எத்தனை வாகனங்கள் இருந்தாலும், ரயிலில் பயணம் செய்வதே தனி சுகம். ரயில்களில் பயணிப்பது மட்டுமல்ல, வளைந்து செல்லும் ரயில்களை பார்த்து ரசிப்பதுகூட ஒரு சுகம்தான். இந்தியாவிலேயே முதன்முதலில் ரயிலை பார்த்து ரசித்தவர்கள் சென்னை மக்கள்தான். சென்னை மாகாணத்தில் சாலைகள் மற்றும் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு 1832 முதல் ஓடத் தொடங்கியது நீராவி இஞ்ஜின் ரயில். அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் ஓடத் தொடங்கினாலும், பயணிகள் ரயில் இயக்கப்பட்டது 1853ஆம் ஆண்டுதான். ரயில்களில் பயணிப்பது எந்த அளவிற்கு அற்புத அனுபவங்களை தருகிறதோ, அந்த அளவிற்கு கவனமும் பொறுப்பும் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது.

விளம்பரம்

சமீபத்தில் ஒரு பயணி தான் இறங்கவேண்டிய ரயில் நிலையம் வருகையில் அது தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க, கண்விழித்த உடன் தான் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டியதை உணர்ந்த அவர் அவசரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் அவர் ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு கடும் அபராதத்தை எதிர்கொண்டார். உண்மையில், எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் ரயிலில் பயணி யாரேனும் அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது விதி.

விளம்பரம்

வடக்கு ரயில்வேயின் ஆக்ரா கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியின் கூற்றுப்படி, ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான பிரிவில், சரியான காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்ததற்காக 759 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,12,530 அபராதம் வசூலிக்கப்பட்டது. பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் துறையில் ரயில்வே தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தகுந்த காரணமின்றி அபாய சங்கிலியை இழுப்பவர்களுக்கு எதிராக வணிகத் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையால் தொடர்ச்சியான தீவிர சோதனை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதில், இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை, ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 245 பேர், ஆக்ரா கோட்டை நிலையத்தில் 24 பேர், மதுரா சந்திப்பில் 336 பேர், கோசிகாலன் ஸ்டேஷனில் 64 பேர், தோல்பூர் ஸ்டேஷனில் 44 பேர் என 759 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. பிடிபட்ட பயணிகள் சிலர், தூங்கிவிட்டு தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை விட்டுச் சென்றவுடன் அபாய சங்கிலியை இழுத்ததாகவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

தகுந்த மற்றும் போதிய காரணமின்றி செயினை இழுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வது குற்றமாகும் என்றும் ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் சக பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

அதேபோல், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தில், அபாய சங்கிலிகளை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய ரயில்வே 11,434 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ரயில்வே சட்டம் 141வது பிரிவின் கீழ் 9,657 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.63.21 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Railway
,
Trending

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து