தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

தங்கப் பதக்கம் வென்ற
மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்திடம் வியாழக்கிழமை வாழ்த்து பெறும் மாணவி எஸ்.நஷ்த்திரா.

கள்ளக்குறிச்சி, ஆக.8: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி தேசிய அளவிலான கேடட் தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். வெற்றி பெற்ற மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்தை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

7-வது தேசிய அளவிலான கேடட் தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு சாா்பில் கேடட் பெண்கள் 176 செ.மீ. உயரத்துக்கு மேற்பட்ட பிரிவில், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த எஸ்.நஷ்த்திரா தங்கப் பதக்கம் வென்றாா். இந்த நிலையில், தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை கள்ளக்குறிச்ச மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம் காண்பித்து மாணவி வாழ்த்து பெற்றாா்.

Related posts

சென்னையில் 6 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சரித்திரப் படம்! ஓய்வு குறித்து பேசிய ஷாருக்கான்! | இன்றைய சினிமா செய்திகள்

அடால்ஃப் ஹிட்லர்