தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது சாமானிய மக்களுக்குக் கவலையளிக்கும் விஷயமாகவே மாறியுள்ளது.

விவேகானந்தர் சிகாகோ உரை நிகழ்த்திய நாள் இன்று: நினைவுகூர்ந்த பிரதமர்!

மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் தந்தாலும், அடுத்தடுத்த நாள்களில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த நான்கு நாளாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ. 53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில், இன்று (செப்.11) தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ. 53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 உயர்ந்து ரூ.91,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!