தங்கலான் படத்தின் ‘மினிக்கி மினிக்கி’ வீடியோ பாடல் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள 'தங்கலான்' படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தங்கலான்' திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தங்கலான் படத்தின் 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#thangalaan the super hit song #minikkiminikki for all of u https://t.co/ZeFfkAYQ9P

— G.V.Prakash Kumar (@gvprakash) August 19, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!