தங்கலான் படத்தின் வார் வீடியோ பாடல் வெளியானது

நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்திலிருந்து ‘தங்கலானே வா வா ஆதியோனே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் தனது கடினமான உழைப்பினால் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

இப்படம் கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் விக்ரம், பார்வதி போன்றோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படமானது இன்று வட இந்தியாவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தங்கலான் வார்' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பாடகரும் படலாசிரியருமான அறிவு எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.

Witness the pursuit of gold become the symphony of courage Watch #ThangalaanWarSong video ▶️Tamil : https://t.co/wNblGVKjVdTelugu : https://t.co/VPcug8r6tyKannada : https://t.co/44zXzXBj4aMalayalam : https://t.co/DY2zvayACJHindi : https://t.co/eLN2rAsYaY A @gvprakash… pic.twitter.com/Q1KXnoQvaf

— Studio Green (@StudioGreen2) September 5, 2024

Original Article

Related posts

இணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு

கோட் படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலின் வீடியோ வெளியானது

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாரி செல்வராஜ் நிதியுதவி