தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை – ஜி.வி பிரகாஷ்

பழங்குடி இசையை தங்கலான் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்படும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

The star-studded team #Thangalaan from after the insightful Thangalaan Roundtable✨ Watch it here ▶https://t.co/VJ3c4OAWid#ThangalaanFromAug15@Thangalaan@chiyaan@beemji@GnanavelrajaKe@StudioGreen2@parvatweets@MalavikaM_@gvprakash@NehaGnanavel@Dhananjayang… pic.twitter.com/DEfJPfbCQ8

— Neelam Productions (@officialneelam) August 3, 2024

படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ஜி.வி பிரகாஷ் தங்கலான் படத்தின் இசை தன்மையை பற்றி கூறியுள்ளார். அதில் "தங்கலான் திரைப்படம் பழங்குடி மக்களின் குரல். அதனால் நான் இதில் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும் எந்தளவுக்கு பழங்குடி இசையை மற்றும் மரபை கொண்டு வர முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து இருக்கிறேன்.

அவர்களை பற்றி நிறைய படித்து தெரிந்துக் கொண்டு , எம்மாதிரியான வாத்திய கருவிகள் அந்த காலத்தில் இருந்தது என்பதை ஆராய்ச்சி செய்து இந்த படத்தின் இசையை நான் மேற்கொண்டுள்ளேன். பழங்குடி இசையை இந்தியன் சினிமா பெருமளவு யாரும் பயன்படுத்தவில்லை. அதனால் இப்படத்தின் நான் அதை பயன்படுத்தியுள்ளேன், மிகவும் பழமை மாறாது மரபோடு இருக்க வேண்டும் என இப்படத்திற்கு இசையமைத்துள்ளேன். " என்று கூறியுள்ளார்.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!