தங்கலான் முதல் பாடல் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தங்கலான் முதல் பாடல் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்புஇயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.

தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இறுதிக்கட்ட பணிகளின் தாமதத்தால் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தங்கலான் டிரைலர் முன்னதாக வெளியாகி, நடிகர் விக்ரமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் பெரிதாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில் தங்கலான் படத்தின் முதல் பாடலான 'மினிக்கி மினிக்கி’ பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்