தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கைது

திருப்பதி,

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் செர்லோபள்ளி வழியாக வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பலை பிடிக்க முயன்றனர். அதில் சிலர் தப்பியோடி விட்டனர். 10 பேர் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, பாலமுருகன், பிரபு, ரஜினிகாந்த், கந்தசாமி, ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், கார்த்தி, ராம்குமார் என்றும், செம்மரங்களை வெட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறினர். இதையடுத்து 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 7 கோடரிகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி