தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்கள்.. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியம்

தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்கள்.. ரயில் ஓட்டுநரின் சாதுர்யமான முடிவு – வைரல் வீடியோ

குஜராத் சிங்கம்

குஜராத் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் வரிசையாக 10 சிங்கங்கள் படுத்திருந்த நிலையில் ரயில் டிரைவர் அதை கவனித்து எடுத்த சாதுரியமான முடிவு காரணமாக சிங்கங்கள் உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 15 ஆம் தேதி துங்கர்பாடா (Dungarpada) என்ற இடத்தில் தண்டவாளத்தில் சிங்கங்கள் இருப்பது குறித்து விவசாயி ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, வனத்துறை ஊழியர் கட்டையுடன் சென்று அவற்றை விரட்டினார். இதே போன்று, இரவில் 4 வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தில் இருந்த சிங்கங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்த நிலையில், பிபாவாவ் துறைமுகம் அருகே உள்ள ரயில் பாதையில் 10 சிங்கங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியாக சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

குஜராத் மாநிலத்தில் அமரேலி என்ற மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் டிரைவர் தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் படுத்திருந்ததை பார்த்ததும் அவசரகால பிரேக் அழுத்தினார். இதனை அடுத்து ஒரு சில அடி தூரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் சிங்கங்கள் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க:
ராகுல் காந்தி விரைவில் ராஜினாமா… வயநாட்டில் களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!

ஓட்டுநர் முகேஷ் குமார் என்பவர் அதிகாலை நேரத்தில் சிங்கங்கள் படுத்திருப்பதை பார்த்ததாகவும் இதனை அடுத்து சிங்கங்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடனடியாக அவர் அவசர பிரேக்கை அழுத்தியதாகவும், ஓட்டுனரின் இந்த செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lion

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?