தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு: எதிர்ப்பால் பதிவை நீக்கிய சித்தராமையா

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு: எதிர்ப்பால் பதிவை நீக்கிய சித்தராமையாதனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த எதிர்ப்பால் தன்னுடைய எக்ஸ் பதிவை நீக்கினார் சித்தராமையாகர்நாடக முதல்வர் சித்தராமையா.

பெங்களூரு: தனியார் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு 100 ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எழுந்த எதிர்ப்பால், அது தொடர்பான பதிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நீக்கிவிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களில் கன்னட மக்களுக்கே 100 சதவீத இட ஒதுக்கீடு என்ற மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அது தொடர்பான பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கியுள்ளார்.

தனியார் நிறுவனங்களல் மேலாண்மை அல்லாத பணியிடங்களில் 70 சதவீத ஒதுக்கீடும், மேலாண்மை தொடர்பான பணியிடங்களில் 50 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஒதுக்கீடு அளிக்கப்பட்ட இடங்களுக்கு கன்னட மக்களில் ஆள்கள் கிடைக்கவில்லை என்றால், அப்போது, வெளி மாநில மக்களுக்கு பணி வழங்கலாம் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதனால், கர்நாடகத்தில் திறமை வாய்ந்தவர்கள் இல்லை என்று கூற முடியாது, திறமையானர்கள் இருக்கிறார்கள், இங்கு ஏராளமான பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், சர்வதேச பள்ளிகள் உள்ளன. எனவேதான் 70 சதவீத இட ஒதுக்கீடு அளியுங்கள் என வலியுறுத்துகிறோம். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் வெளி மாநில நபர்களுக்கு பணி வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சித்தராமையா, 100 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், கன்னட மக்கள் சொந்த மாநிலத்தில் நல்ல முறையில் வாழ இது வகை செய்யும் என்றும், சொந்த மண்ணில் சொந்த மக்கள் வேலையில்லாமல் தவிப்பதை தடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த பிரிவினைவாத முடிவுக்கு தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்துறையினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. பெங்களூரு மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும், பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள் அவர்கள்.

இந்த மசோதா பாரபட்சமானது, பிற்போக்குத்தனமானது என்று மணிப்பால் குளோபல் கல்வி சேவை அமைப்பின் தலைவர் மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழில்துறையினரும், பல மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருப்பதால், எந்தவிதமான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியது வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, இது தொடர்பான குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பட்டீல் தெரிவித்துள்ளார்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்