தனியார் விளம்பரத்தில் நடித்த சீருடை அணிந்த காவலர் இடைநீக்கம்!

தனியார் விளம்பரத்தில் நடித்த சீருடை அணிந்த காவலர் இடைநீக்கம்!விளம்பரத்தில் நடித்த விடியோ வெளியானதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

மத்தியப் பிரதேசத்தில் சீருடை அணிந்துகொண்டு, தனியார் விளம்பரத்தை ஊக்குவித்த விடியோவால் பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வாளர்களுக்கான, ஒரு தனியார் பயிற்சி மையத்தை, ஒரு பெண் காவலர் விளம்பரப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் தனது காவலர் சீருடையை அணிந்தவாறே, அந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பான விடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து, ரத்லோம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா, தனது எக்ஸ் பக்கத்தில் "ஒரு பெண் காவலர், தனது சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை ஊக்குவிப்பது, சமூக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரை பணி இடைநீக்கம் செய்வதாகக் கூறிய காவல் கண்காணிப்பாளர், அந்த பெண் காவலரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், பெண் காவலர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்