தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்

தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதைக் கடந்த தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் பேருந்து ஒன்று காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பேருந்தில் சங்கராபுரம் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த அப்டேட் என்ன அப்டேட்டாக இருக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

A @dhanushkraja film pic.twitter.com/UqpFSdEoRk

— G.V.Prakash Kumar (@gvprakash) November 7, 2024

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say