தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை: ஆர்.என்.ரவி

தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து அமித் ஷாவுடன் ஆலோசனை: ஆர்.என்.ரவிமத்திய உள்துறை மற்றும் கல்வி அமைச்சர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தின் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான பிரச்னைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவாதித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை தெரிவித்தார்.

புதுதில்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எக்ஸ் தளத்தில் தமிழக ஆளுநர் தெரிவித்ததாவது:

“தமிழகத்தின் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான சூழ்நிலைகள், மக்களின் அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனை நடத்தினேன். தமிழக மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வில் அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ஆளுநர், தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்