தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. காலையில் இருந்து மாலை வரை வெயில் கொளுத்துவதும், மாலைக்கு பிறகு கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டுவதுமான நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது