தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஒரு கோடி ரொக்கம் அறிவிப்பு

மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

இந்தியா – நேபாளம் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்: நேபாள பிரதமர்!