சென்னை,
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவான இடங்கள்;
* மதுரை – 103 டிகிரி பாரன்ஹீட்
* நாகப்பட்டினம் – 102 டிகிரி பாரன்ஹீட்
* தஞ்சாவூர் – 102 டிகிரி பாரன்ஹீட்
* பாளையங்கோட்டை – 102 டிகிரி பாரன்ஹீட்
* திருச்சி – 101 டிகிரி பாரன்ஹீட்
* ஈரோடு – 101 டிகிரி பாரன்ஹீட்
* கரூர் – 101 டிகிரி பாரன்ஹீட்
* பரங்கிப்பேட்டை – 101 டிகிரி பாரன்ஹீட்
* சென்னை – 101 டிகிரி பாரன்ஹீட்
* கடலூர் – 100 டிகிரி பாரன்ஹீட்