தமிழகத்தில் இன்று 11 இடங்களில் சதமடித்த வெயில்

சென்னை,

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.34 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு, சென்னை மீனம்பாக்கம் – 106.34 , நுங்கம்பாக்கம் – 105.98 , திருத்தணி, வேலூர் – 104.36, திருப்பத்தூர் – 101.84 , மதுரை நகரம் – 101.48 , பரங்கிப்பேட்டை – 101.3 , மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம் – 100.76 , தஞ்சாவூர் , கடலூர் – 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்