தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை; அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னை,

ஆப்பிரிக்கா நாடுகளில் வேகமாக பரவிய குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டிலும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பரவலையொட்டி உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,

குரங்கம்மை நோய்த்தொற்றால் தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களியேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறி ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும். என தெரிவித்துள்ளார் .

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை