தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கோப்புப் படம்

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

0 – 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 காசிலிருந்து ரூ.4.80 ஆக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

401 – 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் ரூ.6.15 ஆக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து ரூ.6.45ஆக அதிகரித்துள்ளது.

601 – 800 வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20ஆக இருந்த மின் கட்டணம் 45 காசு அதிகரித்து ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

801 – 1000 யூனிட் வரை ரூ.10.12 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 11.25 ஆக இருந்த மின் கட்டணம் ரூ.11.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15-லிருந்து ரூ. 8.55ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-லிருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95ஆக உயர்ந்துள்ளது.

ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-லிருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-லிருந்து ரூ.9.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்