தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கினாலும், பருவமழைக்கான முழுவதுமான கிழக்கு காற்று தற்போதுதான் தென் இந்திய பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. அதிலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதன்படி தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11