தமிழகத்தில் 6 மாதங்களில் 2,000 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தியாகி சாதனை

தமிழகத்தில் 6 மாதங்களில் 2,000 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தியாகி சாதனை

சென்னை: தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அணைகளில் உள்ளநீர் இருப்பை பொருத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்தஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட்நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 சதவீத மின்னுற்பத்தி இலக்கை அடைந்துவிட்டோம். தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.

குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடுஆகிய 4 முக்கிய மின்னுற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதில் இருந்து தினசரி 7 மில்லியன் யூனிட் முதல் 10 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு போதுமான அளவுக்கு உள்ளது. விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையும் அதிக அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலக்கையும் தாண்டி நீர் மின்னுற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினர்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்