தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சேலம், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/99UYYC5Ulg

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 28, 2024

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond