தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி வரி பகிர்வு ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி,

நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக் கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்படுகிறது.

அதன்படி தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், அருணாசல பிரதேசத்துக்கு ரூ.2,455 கோடியும், அசாமுக்கு ரூ.4,371 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது.

அதிக அளவாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.10 ஆயிரத்து 513 கோடியும், மராட்டியத்துக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்