தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?

தமிழகத்தில் தொழில் துறையில் 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(அக். 8) காலை நடைபெற்றது.

சமீபத்தில் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் நடந்த முதல் கூட்டம் இதுவாகும்.

தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழ்நாட்டில் மின்னணு, மென்பொருள், பாதுகாப்பு உபகரணம், மருத்துவத் துறை சார்ந்த உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி, மின் வாகனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் ரூ. 9,000 மோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை மூலமாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு,

காஞ்சிபுரத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 13,180 கோடி மதிப்பில் ஏறத்தாழ 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு,

தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டத்திலும் புதிய தொழிற்சாலைகள் அமையவுள்ளது.

இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்.

மொத்தம் ரூ. 38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளின் மூலமாக 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த புதிய தொழில் அமைப்புகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டத்தின்படி என்னென்ன சலுகைகள் உள்ளதோ நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என்று கூறினார்.

தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 'சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முதல்வர் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறார் சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க | மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! – மு.க. ஸ்டாலின் உத்தரவு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இன்று (8.10.2024) அமைச்சரவை ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இம்முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB) குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள்.

பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9,000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5,000 நபர்கள்). காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13,180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14,000 நபர்கள்). தூத்துக்குடி விருதுநகர், திருநெல்வேலி ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10,375 கோடி முதலிடு, வேலைவாய்ப்பு 3,000 நபர்கள்), அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1,000 கோடி முதலீடு. வேலைவாய்ப்பு 15,000 நபர்கள்). காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா விரைவேட் லிமிடெட் (ரூ. 1,395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1,033 நபர்கள்). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1,200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்களாகும்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்