தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் புதிதாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது

இந்த அமைச்சரவை கூட்டத்தில், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் மக்களுக்கான திட்டங்களை அந்தந்த துறைகள் முறையாக கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் இறுதியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் “ரெட் அலர்ட்”: கனமழை நீடிப்பு