தமிழக பள்ளி அணிகளுக்கான லீக் ஆக்கி போட்டி 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆக்கி விளையாட்டை வளர்க்கும் பொருட்டு முதல்முறையாக நடத்தப்படும் இந்த போட்டி சென்னை உள்பட 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மண்டல போட்டிக்கு முன்னேறும். மண்டல போட்டி சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவில் மாநில அளவிலான போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன் தெரிவித்தார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி