தமிழக மீனவர்களை விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் 3 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, ஒரு விசைப்படகும் சிறை பிடிக்கப்பட்டது.

மத்திய பா.ஜனதா அரசு இந்த பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்