தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு – இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு – இலங்கை கடற்படை நடவடிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சி

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். இவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி, படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகு மோதி இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படகில் இருந்த 10 மீனவர்கள் மீதும் காங்கேசன் துறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

முன்னதாக இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிக்க:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமின்… சனாதானம் குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும் 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் நடப்பு ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 27 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமுதாயத்தினர் இடையே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
CM MK Stalin
,
Fishermen
,
Sri Lanka

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு