தமிழக மீனவர்கள் 37 பேர் கைது; இலங்கை கடற்படை நடவடிக்கை

கொழும்பு,

தமிழகத்தில் எல்லை கடந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் கூறப்பட்டு வருகிறது. இதில், மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், விசாரணை செய்த பின்பு அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களை இலங்கையின் நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதன்படி, 3 விசைப்படகுகள் மற்றும் 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்