தமிழக விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு !

தமிழக விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 33 பேருக்கு ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருது அறிவிப்பு !

சந்திரயான்-3 திட்டக் குழு விஞ்ஞானிகள் உள்பட 33 பேருக்கு மத்திய அரசின் ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிறது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த தினத்தை தேசிய விண்வெளி தினமாகவும் மத்திய அரசு அறிவித்தது. வரும் 23-ம் தேதி இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடவுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில், சந்திரயான் திட்ட இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.வீரமுத்துவேல் மற்றும் பொறியாளர்கள் ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீங்களும் பென்ஷன் பெறலாம்… அரசு ஊழியராக இருக்க வேண்டாம்.. எப்படி தெரியுமா.?
மேலும் செய்திகள்…

சந்திரயான்-3 விஞ்ஞானிகள் தவிர, மேலும் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 32 விஞ்ஞானிகளும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Chandrayaan 2
,
chandrayaan 2 isro
,
ISRO

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்